search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருமான வரித்துறை அதிகாரிகள்"

    டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அ.தி.மு.க. எம்.பி.யின் சூட்கேசில் கட்டுக்கட்டாக ரூ.25 லட்சம் இருந்தது. இது தொடர்பாக அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று இரவு 8.15 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் ஆரணி தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ஏழுமலை வந்தார்.

    டெல்லி விமான நிலையத்தில் அவரது உடைமைகளை சோதனை செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரது சூட்கேசில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனே சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்படி அந்த விமானம், சென்னையில் தரை இறங்கியதும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஏழுமலை எம்.பி.யை தடுத்து நிறுத்தி, அவரது சூட்கேசை சோதனை செய்தனர். அதில் ரூ.25 லட்சம் வரை இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் சென்னை விமான நிலையம் விரைந்து வந்து அ.தி.மு.க. எம்.பி.யிடம் விமான நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ஏழுமலை எம்.பி. மகளின் படிப்பு செலவுக்காக இந்த பணத்தை கொண்டு வந்ததாக கூறி அதற்கான உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பித்தனர்.

    பின்னர் ஒரு மணி நேர விசாரணைக்கு பின் வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை பணத்துடன் செல்ல அனுமதித்தனர்.

    இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நேற்று இரவு முதல் 9 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். #ITRaids #LokSabhaElections2019 #Andipatti
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டியில் உள்ள வணிக வளாகத்தின் கீழே செயல்படும் அமமுக அலுவலகத்தில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய 9 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1.48 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மொத்தம்  94 பண்டல்கள் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த பண்டல்களில் வாக்காளர் பெயர் பட்டியல், வார்டு எண்ணுடன் இருந்தது. அத்துடன் ஒரு தபால் வாக்குச்சீட்டும் கைப்பற்றப்பட்டது. அதில், அமமுக வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது.



    ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மொத்தம் 2 கோடி ரூபாய் பணம் கொண்டு வந்துள்ளனர்.  வருமான வரி சோதனையின்போது, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் சிலர் பணத்துடன் தப்பி ஓடிவிட்டனர். #ITRaids #LokSabhaElections2019 #Andipatti
    சென்னை மற்றும் அருப்புக்கோட்டை எஸ்பிகே கட்டுமான குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ரூ.80 கோடி ரொக்கத்துடன் 100 கிலோ தங்கம் சிக்கியுள்ளது.
    சென்னை:

    சென்னை மற்றும் அருப்புக்கோட்டை எஸ்பிகே கட்டுமான குழுமத்திற்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    வரிஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சென்னை, அருப்புக்கோட்டை,மதுரை உட்பட 30 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அருப்புக்கோட்டையில் செய்யாதுரை என்பவருக்கு சொந்தமான எஸ்பிகே நிறுவனத்தின் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

    இந்த சோதனையில், ரூ.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஜாய்ஸ் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முட்டை கொள்முதல் ஊழல் தொடர்பாக  பல்வேறு இடங்களில் கடந்த வாரம் வருமான வரி சோதனை நடந்த நிலையில் இன்று நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
    ×